சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது. SPH media trust நிறுவனத்திற்கு அரசாங்கம் கொடுக்கவிருக்கும் நிதியில் மாற்றம் இருக்கிறதா?என்பதும் ஒன்று.
இந்த கேள்விக்கு தொடர்பு, தகவல் அமைச்சர் Josephin Teo பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அதன் தொடர்பில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
SPH media செய்திக் கு உள்ளூர் குரல் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகுக்கிறது.SPH Media trust அதன் விநியோக கணக்கீட்டில் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டிருந்தது.இதனால் அதற்கு கொடுக்கவிருக்கும் நிதியில் மாற்றம் ஏற்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். அதில் மாற்றம் இருக்காது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் கூறினார்.
பத்திரிக்கை விநியோகத்துக்கும் அரசாங்கம் கொடுக்கும் நிதிக்கும் சம்பந்தமில்லை.எந்த அளவுக்கு வாசகர்களைச் சென்றது அடிப்படையில் நிதி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
அரசாங்கம் 180 மில்லியன் வெள்ளி ஐந்து ஆண்டுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.SPH media க்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தாய்மொழிச் செய்தி ஊடகத்துக்கு ஆதரவு கொடுப்பதற்கும்,அவர்களின் ஆற்றலை அதிகப்படுத்தவும் நிதி கொடுப்பது அவசியம் என்று அவர் கூறினார்.