முதல் முறையாக மனிதர்களுக்கு போடப்படும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!! எந்த நாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது?
பறவைக்காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரத்தில் இருந்து ஒரு சில ஊழியர்களுக்கு போட பின்லந்து திட்டமிட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இந்த தடுப்பூசியை கால்நடைகளுடன் தொடர்பு உடையவர்களுக்கு முதலில் போடுவதாக தெரிவித்தனர்.
பறவை காய்ச்சல் தடுப்பூசியை மனிதர்களுக்கு பயன்படுத்திய முதல் நாடாக பின்லந்து இருக்கும்.இதுவரை குறைந்தது பத்தாயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு போடப்படும்.
உலகம் முழுவதும் H5N1 பறவை காய்ச்சல் காரணமாக மில்லியன் கணக்கான பறவைகள் இறந்துள்ளன.
மேலும் பாலூட்டி விலங்குகளுக்கும் பரவுகிறது.
இதன் மூலம் மனிதர்களுக்கும் பரவி வருகிறது. பின்லந்தில் பறவைக்காய்ச்சல் இதுவரை மனிதர்களை தாக்கி உள்ளதாக பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த தடுப்பூசி திட்டத்தை தொடங்க ஆர்வமாக உள்ளது.
Follow us on : click here