ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் கோல்ப் வீரர் ஷெனன் டான்...
சிங்கப்பூர்: ஒலிம்பிக் கோல்ப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை 20 வயதை சேர்ந்த ஷெனன் டான் என்பவரை சேரும்.
அவர் முதல் முறையாக பெண்கள் உலக கோல்ஃப் தரவரிசையில் முதல்-200க்குள் வந்தார்.
ஷெனன் டான் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முறை கோல்ப் வீரர் மற்றும் பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயண வீரரும் ஆவார்.
அவர் சீனா LPGA சுற்றுப்பயணத்தில் 2023 சிங்கப்பூர் லேடீஸ் மாஸ்டர்ஸ் வென்றார்.மேலும் 2024 இல் அவரது LET அறிமுகத்தில் மேஜிக்கல் கென்யா லேடீஸ் ஓபனை வென்றார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஒலிம்பிக்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வாய்ப்பை ஷெனன் பெற்றிருப்பதை நினைத்து தான் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
ஒலிம்பிக் கோல்ஃப் தரவரிசையின்படி, உலகளவில் மொத்தம் 60 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
தற்போதைய நிலவரப்படி, ஷெனன் உட்பட மொத்தம் 23 சிங்கப்பூரர்கள் வெவ்வேறு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here