லட்சுமி மேனன் முதலில் காதலித்தது இவரையா…?

லட்சுமி மேனன் முதலில் காதலித்தது இவரையா...?

தமிழ் திரைப்பட நடிகையான லட்சுமி மேனன் மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்த அனுபவங்களை பற்றி மிகவும் ஓபனாக பேசியுள்ளார்.

லட்சுமி மேனனின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்த மலையாள இயக்குநர் வினையன் அவருக்கு
‘ ரகுவிண்டே சுவந்தம் ரசியா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுந்தர பாண்டியன் படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தமிழில் குட்டி புலி, மஞ்சப்பை ,நான் சிவப்பு மனிதன், ஜிகர்தண்டா, மிருதன் ,வேதாளம் ,கொம்பன் ,பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக இவர் நடித்த சந்திரமுகி படம் படுதோல்வியை கண்டது இருப்பினும் தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் காதல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அவர் என்னிடம் யாரும் ப்ரபோஸ் செய்ததில்லை.. ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன்.. அவரிடம் நேராக சென்று உங்களை பிடித்திருக்கிறது என்று கூறினேன். அவரும் சில நாட்கள் கழித்து என்னை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். தொலைபேசியில் பல மணி நேரம் இருவரும் பேசுவோம். வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டு எல்லாம் பேசி உள்ளேன். ஆனால் வெளியில் இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ள மாட்டோம். பின்னர் எனக்கு பட வாய்ப்புகள் வந்ததால் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை அதேபோல் அந்த காதலையும் தொடர முடியவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது என்று கூறினார். லட்சுமிமேனன் தற்போது சப்தம், கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.