பிப்ரவரி 1-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீடில் உள்ள சிற்றாங்காடியில் 31 வயதுடைய நபர் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாலையில் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
காவல்துறை அந்த இடத்திற்கு சென்றனர். அதன் பின், விசாரணை நடத்தியதில் சந்தேகிக்கும்படி 31 வயதுடைய நபர் கைதுச் செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், கத்தியை காட்டி கடையிலுள்ள அனைத்து பணத்தையும் தம்மிடம் கொடுக்கும் படி அவர் மிரட்டியதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் யாரும் காயப்படவில்லை.
காவல்துறை அவரை 18 மணி நேரத்தில் கைதுச் செய்தது. கைது செய்யப்பட்டவரிடமிருந்து 276 வெள்ளி,கத்தி,துணிமணிகள் கைப்பற்றப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட நபருக்கு 3 லிருந்து 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக் கிடைக்கும். சிறை தண்டனை மட்டுமல்லாமல் குறைந்தபட்ச 12 பிரம்படிகளும் கிடைக்கலாம்.