சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

அடுத்த மாதம் முதல் மாண்டாய் மற்றும் சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்ஸிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சிங்கப்பூரின் முகப்பெரிய டாக்ஸி நிறுவனமான ComfortDelGro அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தற்போது கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்காலிகமாக அமலில் உள்ளது.

அது இனி நிரந்தரமாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையம், சாங்கி சரக்கு நிலையம், விமான நிலையத்தின் தளவாடப் பூங்கா, விமான நிலையத்தின் காவல்துறை என ஐந்து இடங்களில் டாக்ஸிகளை எடுக்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.டாக்ஸிகளுக்கு கூடுதலாக 8 வெள்ளி செலுத்த வேண்டும். இந்த இடங்களில் மாலை 5 முதல் இரவு 11.59 மணி வரை டாக்ஸிகளை எடுக்கும் பயணிகளுக்கு இது பொருந்தும்.

இந்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் 6 வெள்ளி கூடுதலாக கட்ட வேண்டும்.

மண்டாய் விலங்கியல் பூங்கா, பறவைகள் பூங்கா, River Safari, Night Safari ஆகிய இடங்களிலிருந்து டாக்ஸியில் சென்றால் கூடுதலாக 5 வெள்ளி செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

இதற்குமுன் இந்த கட்டணம் 3 வெள்ளியாக இருந்தது.