Singapore news

இணையதளச் சேவை ஊழியர்கள் வேலையின் போது காயமடைந்தால் இழப்பீடு வழங்க உதவும் சிறப்புக் குழு! காப்புறுதி கட்டாயம்!

விநியோக ஓட்டிநர்கள் உள்ளிட்ட இணையதளச் சேவை ஊழியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் Tan See Leng கலந்துக் கொண்டார்.

வேலையின் போது இணையதளச் சேவை ஊழியர்கள் காயமடைந்தால் அவர்களுக்குரிய இழப்பீடு வழங்க உதவ சிறப்புக் குழு ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக ஆலோசனைக் குழு ஒன்று 12 பரிந்துரைகளை வெளியிட்டு இருந்தது.கடந்த நவம்பர் மாதம் அந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

வேலையின் போது ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டால் அதற்கான நிதி பாதுகாப்பு தர வேண்டும். பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.

சிங்கப்பூர் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்காக காப்புறுதி எடுப்பது கட்டாயம். ஊழியர்கள் காப்புறுதி வைத்திருந்தால் அவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் காயம் அடைந்தால் கூடுதல் இழப்பீடு கிடைக்க உதவும்.

காப்புறுதி மருத்துவக் கட்டணச் செலவுகளுக்கும் உதவும். அதேபோல் சம்பள இழப்பைக் கொடுக்கவும் உதவும்.மற்ற துறைகளைப் போல இணையத்தளச் சேவையில் வேலைப் பார்ப்பவர்களின் மத்திய சேமநிதிச் சந்தாவைப் போலவே கொண்டுவர பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனம்,காப்புறுதி நிறுவனத்தோடு முத்தரப்பு பங்காளிகள் ஆகியோர் P-WIN என்ற புதிய கட்டமைப்பில் இடம்பெறுவார்கள்.