அமெரிக்காவின் பல பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில்!!
நியூயார்க்: அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த வெப்ப அலை குறைந்தது ஆறு நாட்களுக்கு மேல் தொடர்கிறது.
பல பகுதியில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது.
பால்டிமோர் பகுதியில் வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. 1988 ஆம் ஆண்டு பதிவான 37.7 டிகிரி செல்சியஸை முறியடித்துள்ளது. ஓஹியோ, பென்சில் வேனியா மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈரப்பத வெப்ப வானிலையாக நிலவுகிறது.
பிலடெல்பியா மற்றும் தம்பா புளோரிடா ஆகிய இடங்களில் 37.7 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
ஜூன் 22 மற்றும் 23 தேதிகளுக்கு இடையே 39.4 டிகிரி வெப்ப அலையை தாண்டும் என்று கருதப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது.
நியூயார்க் நாடு முழுவதும் உள்ள மின் கட்டங்கள் இதுவரை பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன.
வெப்பநிலை காரணமாக மின்தடைகளும் ஏற்படுகிறது.
அதிக வெப்பநிலை காரணமாக அதன் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here