இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!!
சிவம் தூபே வெளியில் இருந்தால் தான் சரியாக இருக்கும்.. இந்திய அணியில் மாற்றங்களை செய்யும் ரோஹித் சர்மா..
ஐசிசி T20 2024 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப்பை சுற்றுக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோதின. அடுத்து குரூப் 1 பிரிவில் இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. சூப்பர் 8 பிரிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடியுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவிடம் வங்கதேசம் தோல்வியடைந்தது.
எனவே இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற இது ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றாலும், அது பெரிய பிரச்னையாக இருக்காது, அரையிறுதிக்குத் தகுதி பெற அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே இந்திய அணி இந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளவே விரும்பும்.
இந்திய அணியானது பேட்டிங்கில் சற்று கடினமான இலக்கை நிர்ணயித்தால், அவர்களின் பந்துவீச்சு இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும். வங்கதேசத்தில் மிகச் சிறந்த பவுலர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்திய அணியையும் குறை கூற முடியாது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வங்கதேச அணியின் பவுலர்களான டன்சிம் ஹசன் ஷகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்துகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.சுழல் பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளனர் .குரூப் சுற்றில் இலங்கையை வீழ்த்திய அதே ஃபார்முலாவை வைத்து இன்று இந்திய அணிக்கு வங்கதேசம் எதிர்கொள்ள முயற்சிக்கும்.
இந்திய அணி பேட்டிங்கில் சில மாற்றங்களைச் செய்தால் இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.ஷிவம் துபேக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கினால் மிடில் ஆர்டர் இன்னும் பலமாக இருக்கும். சூர்யகுமார், ஹர்திக் பாண்டியாவுடன் சஞ்சு கை கோர்த்தால் ரன் ரேட்டும் உயர வாய்ப்புள்ளது.
மேலும், கூடுதல் பேட்டிங் விருப்பம் தேவைப்பட்டால் ஜடேஜாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்கலாம். ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாட கூடியவர். எனவே அவரை களம் இறக்கினால் சரியாக இருக்கும். அரையிறுதிக்கு தகுதி பெறவும், இனிவரும் போட்டிகளுக்கு சிறந்த கலவையை அமைக்கவும் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் பட்சத்தில் ரோகித் சர்மா கண்டிப்பாக அணியில் மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளதால் ரசிகர்களுக்கு போட்டியானது விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here