உலகின் பணக்காரர்கள் அதிகம் செல்லும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் எந்த இடத்தில் உள்ளது?
Henley Private Wealth Migration Report அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அது உலகின் பணக்காரர்கள் அதிகம் பார்வையிடும் நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியல்.
அதில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு சுமார் 3,500 க்கும் மேற்பட்ட பல மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வருகைப் புரிவார்கள் என்று கருதப்படுகிறது.
ஆசியாவுக்கு குடியேற விரும்பும் பணக்காரர்கள் சிங்கப்பூரை அதிகம் தேர்வு செய்வதாகவும், விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக United Arab Emirates பிடித்துள்ளது.
அங்கு இந்த ஆண்டு 6,700 பணக்காரர்கள் செல்வார்கள் என்று கணித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் அமெரிக்கா பிடித்துள்ளது.இந்த ஆண்டு 3,800 பணக்காரர்கள் அங்கு செல்வார்கள் என்று கணிக்கப்படுகிறது.
Follow us on : click here