திரையில் மூழ்கியிருக்கும் இளையர்கள்!! கூடிய விரைவில் புதிய நடவடிக்கை!!
சிங்கப்பூர்: உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஒருபுறம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கத்தான் செய்கிறது. மொபைல் போன் என்பது ஒரு அவசர தேவைக்கு என்ற நிலை மாறி இன்று அனைவருக்கும் அது ஒரு அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இன்று பலரின் வீடுகளிலும் அன்பாக பழகி பேசுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை காரணம் அனைவரின் கையிலும் மொபைல் போன் இருக்கிறது. இப்படி தொடர்ந்து திரையினை உற்று நோக்கும்போது அது உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுவது உண்டு. குறிப்பாக நடத்தையில் மாற்றம்,கவனச் சிதறல்,மன அழுத்தம்,தூக்கமின்மை ,கண்பார்வை குறைபாடு உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசாங்கம் சமூகத்தின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தொடர்ந்து திரை பார்ப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் இளைஞர்கள் அதிக நேரம் திரையை பார்ப்பதை தடுக்க கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
“இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வழங்கப்படும் அறிவுரைகளானது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இது சுகாதார வசதிகள் மற்றும் பாலர் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். வீட்டில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் வழிகள் ஆராயப்பட வேண்டும்,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சுகாதார எச்சரிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியதை அடுத்து திரு ஓங்கின் கருத்துக்கள் வந்துள்ளன. புகையிலை பொருட்கள் மீது சுகாதார எச்சரிக்கைகள் இருப்பதைப் போலவே, சமூக ஊடக தளங்களிலும் எச்சரிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரி விவேக் மூர்த்தி வலியுறுத்தினார்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்னைகளுக்கு சமூக ஊடகங்களே ஒரு முக்கியக் காரணம் இது மிகவும் கவலை அளிக்கிறது என்று டாக்டர் விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.
திரு.வோங் அவர்கள் சுகாதார அமைச்சகமும், குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.இப்பிரச்சினைக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் எதிர்வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Follow us on : click here