சிங்கப்பூரில் வருகிற பிப்ரவரி,5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. கிருமி பரவல் காரணமாக தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலமும்,காவடிகளும் இடம் பெறாமல் இருந்தது.இந்த ஆண்டு பாத ஊர்வலத்திற்கும் காவடிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. தைப்பூச திருவிழாவிற்காக பல ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்து அறக்கட்டளை வாரியம் ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவின் போது மது அருந்தும் போக்கை நிறுத்தும் நோக்கில் வாரியம் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
தைப்பூசத் திருவிழாவில் பால்குடம்,காவடி என நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொள்வார்கள். பாத ஊர்வலத்தில் செல்லும் சிலர் மதுபோதையில் இருப்பதையும், புகைப்பிடிப்பதையும் காண முடியும்.
ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த நிகழ்வைத் தவறாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனை தடுக்கும் நோக்கில் வாரியம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
சமூக ஊடகத் தளங்களான Facebook, Instagram பக்கங்களில் இதுகுறித்த தகவலைப் பதிவிட்டுள்ளது.அதில்,“மது அருந்துவதையும், புகைப் பிடிப்பதையும் தைப்பூசத் திருவிழாவிலும் ஆலய வளாகத்திலும் தவிர்க்கும்படி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது´´.
இந்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர்களுடன் பகிரும்படி வாரியம் கேட்டுக் கொண்டது. அனைவரும் ஒன்றிணைந்து தைப்பூசத் திருவிழாவின் போது மது அருந்திவிட்டு வரும் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாரியம் கேட்டுக்கொண்டது.