அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்…

அவரை எதுவுமே சொல்ல முடியாது.... பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்...

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவை பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூட கவனிக்கமாட்டார் என்றும், பும்ராவின் பந்துவீச்சு குறித்து எந்த அணியிலும் யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்றும் அக்சர் படேல் கூறியுள்ளார்.

அக்சரின் கருத்து- பும்ராவின் செயல்திறனில் இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் பேட்டிங் முக்கிய காரணம் என்றாலும், பும்ராவின் பந்துவீச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் பார்படாஸ் மைதானம் நியூயார்க் மைதானம் போல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை.அப்படிப்பட்ட ஆடுகளத்தில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேலும் அவர் 20 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பும்ரா ஒரு ஓவருக்கு சராசரியாக 2 ரன்கள் கூட எடுக்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்சர் படேல், பும்ரா எப்போதும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். இந்திய அணி எவ்வளவு மோசமாக இருந்தாலும், எளிதாக ஆட்டத்தை மாற்றும் ஆற்றல் பும்ராவுக்கு உண்டு. இந்திய அணியில் பும்ராவின் பந்து வீச்சை யாரும் குறை கூறமாட்டோம்.ஏனெனில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது அவருக்குத் தெரியும். ஒரு விஷயம் சரியாக நடக்கும் போது, ​​பந்துவீச்சு பயிற்சியாளர்கள் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க மாட்டார்கள்.ஏனெனில் அது பந்து வீச்சாளர்களின் மூளையில் சில குழப்பங்களை ஏற்படுத்தினால் அது சரியாக அமையாது. மேலும் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே பும்ராவிடம் உற்சாகப்படுத்த மட்டுமே பேசுவார். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் அறிவுரையின் போது கூட பும்ராவிடம், உங்கள் மனநிலை என்னவாக இருந்தாலும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதைச் சரியாகச் செயல்படுத்துங்கள் என்று அறிவுறுத்துவார். என்னுடைய பந்துவீச்சைப் பொறுத்த வரையில், நான் மற்றவர்களின் பந்துவீச்சைப் பார்ப்பதில்லை. எனது திட்டம் என்ன, எனது பங்கு என்ன என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி செயல்படுவேன். இந்த ஆடுகளத்தில் 2 பந்துகள் வீசும்போதே தெரிந்து கொண்டேன் பந்தை மெதுவாக வீசுவது சரியாக இருக்கும் என்று கணித்தேன். அது தனக்கு நன்மை அளிக்கும் விதமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை பூம்ராவின் பந்துவீச்சு சிறப்பானதாக அமையும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.