Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 6 பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
வரும் பிப்ரவரி,6-ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்ப உள்ளனர் என்று இந்திராணி ராஜா முகநூலில் குறிப்பிட்டார்.சிலர் போதிய புரிதல் இல்லாமல் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்துப் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதித்துறையின் உலகளாவிய தீர்மானத்தின்கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுமார் 420 மில்லியன் டாலர் அபராதகமாகவும் செலுத்தியது.