சிங்கப்பூரில் இன்று இலவச ரயில் பயணம்!! எங்கு? எப்போது?
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள 7 ரயில் நிலையங்கள் இன்று (ஜூன் 21) திறக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருப்போருக்கு இந்த சேவை வசதியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்லாப், பேஷோர் என ஏழு ரயில் நிலையங்கள் உள்ளன.
பொதுமக்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த ஏழு நிலையங்களையும் பார்வையிடலாம். மேலும் இலவசமாக பயணிக்கலாம்.
வரும் 23-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரயில் சேவை தொடங்குகிறது.
Follow us on : click here