கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள்!! சுத்தம் செய்யும் பணி எந்த கட்டத்தில் உள்ளது?
சிங்கப்பூரில் ஜூன் 14-ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே கனரக கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்த கப்பல் மீது மோதியது.
நகராமல் நின்று கொண்டிருந்த கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்தது.
இதனால் செந்தோசா உட்பட சில கடற்கரைகள் மூடப்பட்டன.
பெரும்பாலான கடற்கரை பகுதிகளில் எண்ணெய் படலங்கள் சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலங்கள் முழுமையாக அகற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கூட்டறிக்கை வெளியிட்டப்பட்டது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கடற்கரைகளை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் தூய்மைப் படுத்தும் பணி நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தானா மேரா பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்தும் பெரும்பாலான எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிக அளவிலான எண்ணெய் படலங்கள் செந்தோசாவின் சிலோசா கடற்கரை,St John’s Lazarus மற்றும் kusu ஆகிய தீவுகளின் கடற்கரைகளிலும் எண்ணெய் கசிவுகள் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுப்புற அமைப்பு தீவிரமாக இந்த நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அடுத்து படிப்படியாக கடற்கரை பாறைகளில் படிந்துள்ள எண்ணெய் படலங்களை அகற்றவும், சுத்தம் செய்வதிலும் கவனம் செலுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow us on : click here