யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey’!!

யூரோ 2024 : அனைவராலும் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் மிகப்பெரிய `Jersey'!!

யூரோ 2024 காற்பந்து போட்டியின் குழுப் பிரிவு ஆட்டத்தில் நாளை இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய இருநாடுகளும் மோத உள்ளன.

அந்த போட்டியை முன்னிட்டு ரோமில் உள்ள பிரபல படிக்கட்டான Pizza di Spagna – இல் இத்தாலியின் காற்பந்து சட்டை மிகப்பெரிய ராட்சத அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படிக்கட்டுகள் ‘Spanish Steps’ என்று அழைக்கப்படுகிறது.

இது ரோமின் மிகப்பழமையான அடையாளங்களில் ஒன்றாகும்.

அது 1723 மற்றும் 1726 க்கும் இடையில் கட்டப்பட்டது.

இத்தாலியின் நீல நிற `Jersey’ படிக்கட்டுகளில் மிகப் பிரம்மாண்ட அளவில் விரிக்கப்பட்டுள்ளது.

இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் மற்ற அணிகளும் இது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.