சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!
சிங்கப்பூரின் மொத்த வேலை வாய்ப்பு விகிதம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.
ஆட்குறைப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலை வாய்ப்பு அதிகரித்ததற்கான காரணம் குடியிருப்பாளர்கள் என்று கூறுகிறது.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் நிதி,காப்பீட்டு மற்றும் பொது நிர்வாக சேவைகள் துறைகளில் வேலை செய்வது அதிகரித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் பணி புரிவது குறைந்துள்ளது.
மொத்த வர்த்தகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் ஆட்குறைப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு செய்வதற்கு வர்த்தக மறுசீரமைப்பை காரணமாக இன்னும் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
Follow us on : click here