சிங்கப்பூரில் இனி உணவங்காடிகளில் மின்னிலக்க முறையில் பணத்தைச் செலுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது விலைவாசி உயர்வு ஆகிருக்கும் நிலையிலும் உணவங்காடி கடைகள் செயல்பட்டு வருகிறது.
அவைகள் தொடர்ந்து செயல்படுவதற்காக புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன. இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு ஐந்து மில்லியன் உணவைக் குறைந்த விலையில் தருகிறது.
மின்னிலக்க முறையில் பணத்தை செலுத்த மூத்தவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டமானது உதவும். இதன் மூலம் அவர்களுக்கு மின்னிலக்கத்தில் உதவித்தொகை கிடைக்கும். மூத்தவர்கள் பயன்பெறுவர்.
அன்றாட வாழ்க்கையில் மின்னிலக்க முறையை ஒரு பகுதியாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.
இத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் Paylah மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அடுத்த வெள்ளிக்கிழமைலிருந்து நடப்புக்கு வரும்.அதாவது, ஒவ்வொரு வாரமும் Paylah மூலம் பணத்தை செலுத்தும் 1,00,000 பேருக்கு உணவங்காடி நிலையங்களில் 3 வெள்ளிச் சலுகைகள் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் 12,000 அங்காடி கடைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு DBS வங்கி ஆதரவு அளித்து இருக்கிறது.