வடகொரியாவுக்கு ரஷ்யா அதிபர் அதிகாரத்துவ பயணம்!! ரஷ்யா அதிபருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!!
ஜூன் 19-ஆம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு அதிகாரத்துவப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பியோங்யாங்கில் ரஷ்யா அதிபரை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.அவரை ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
ஆடம்பரமான விழாக்களுடன் வரவேற்பு நிகழ்ந்தது.
அங்கு அவர்
வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் -ஐ சந்தித்தார்.
அங்கு நடைபெற்ற கிம் உடனான அரிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை முழுமையாக ஆதரிப்பதாக கிம் கூறினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்வு குறித்த வீடியோவை ரஷ்யா ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகள் பலூன்களைப் பிடித்து கொண்டிருந்ததையும் காணலாம்.
தேசிய கொடிகளுடன் கிராண்ட் பீப்பிள்ஸ் ஸ்டடி ஹால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும்,இரு தலைவர்களின் மாபெரும் உருவப்படங்களை காணலாம்.
மேலும் ரஷ்யா மற்றும் வடகொரியா இரு நாட்டின் உறவும் புதிய மலரும் காலக்கட்டத்திற்குள் நுழைவதாக கிம் கூறியதாக கூறப்படுகிறது.
Follow us on : click here