சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 24,000 புதிய வேலைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்காக 17.8 மில்லியன் வெள்ளி பொருளியலுக்காக பங்கு அளிக்கப்படும்.
Enterprise singapore அமைப்பிடம் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு உதவிகள் பெறப்பட்டது.இதன் மூலம் புதிய வேலைகளை உருவாக்கும் முயற்சிக்கு உதவும் என்று தெரிவித்தன.
புதிய வர்த்தகத் திறன்கள், புத்தாக்கம், வெளிநாட்டு விரிவாக்கம் முதலிய அம்சங்களுக்கு Enterprises singapore அமைப்பு உதவி புரிந்திருக்கிறது. சுமார் 18,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியும் வருகிறது.
நிறுவனங்கள் அனைத்து உலக ரீதியில் செயல்பாடுகளை செயல்படுத்த நினைக்கும் ஈராயிரம் நிறுவனங்களுக்கு அமைப்பு உதவி இருக்கிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டைக் காட்டிலும் கால் பங்கு அதிகம். மூன்று வருடங்களாக நோய் பரவல் காரணமாக எல்லை கட்டுப்பாடுகள் மூடப்பட்டிருந்தது. தற்போது இவ்வாண்டு அனைத்துலக எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
இதனால் சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் கால் பதிக்க விரும்புகிறது. இதற்கான முயற்சியில் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகிறது. நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஆராயும் முயற்சிக்கு அமைப்பு உதவுகிறது.
அது மட்டுமல்லாமல் நிறுவனங்கள் நீடித்த நிலத்தன்மையுடன் இருப்பதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. Enterprise Singapore அமைப்பு நிறுவனங்களின் பசுமைப் பயணத்தைத் தொடங்கி வைப்பதற்கும் உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தன.