உணவு விநியோகிப்பாளருக்கு பணத்தை கட்டாமல் டிமிக்கி காட்டிய சிறுமி!! பிறகு நடந்தது என்ன..?

உணவு விநியோகிப்பாளருக்கு பணத்தை கட்டாமல் டிமிக்கி காட்டிய சிறுமி!! பிறகு நடந்தது என்ன..?

சிங்கப்பூர்: உணவு டெலிவரி செய்பவர்கள் மூன்று பேரை ஏமாற்றிய இளம்பெண் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நன்னடத்தை கண்காணிப்பு விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொதுவாக சிறார் சட்ட விதியின்படி 18 வயதுக்கு குறைவான குற்றவாளிகளின் பெயரை வெளியிடுவதை அச்சட்டம் தடை செய்கிறது.

இளம் பெண் தான் வாங்கிய பொருட்களுக்கு PayNow மூலம் பணம் செலுத்தி விட்டதாக கூறி உணவு டெலிவரி செய்தவர்களிடம் அந்தப் பெண் ஏமாற்றி இருக்கிறார்.

இதுபோல அவர் தொடர்ந்து மூன்று பேரை ஏமாற்றியுள்ளார்.

அவர் மொத்தம் 415 வெள்ளியை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

பணம் செலுத்தப்பட்டதாகக் காட்டும் தவறான மொபைல் ஸ்கிரீனை காட்டி மோசடி செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதற்காக அவர் 18 மாதங்கள் வரை நன்னடத்தை சோதனையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.