இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா?

இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா?

T20 உலக கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜடேஜாவிற்கு 35 வயது ஆகி விட்டதால் கூடிய விரைவில் அவரது இடத்திற்கு இன்னொருவரை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.அவரது இடத்தில் அக்சர் படேல் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் அவர் தற்போது நடைபெற்று வரும் டி-20 குரூப் சுற்று போட்டிகளில் பேட்டிங்கில் ரன்களை எடுக்க வில்லை.

அதே போல் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று ஓவர்களை மட்டுமே பந்துகளை வீசியுள்ளார்.

அக்சர் படேல் ஜடேஜாவை விட அதிகான ஓவர்களில் பந்து வீசி விக்கெட்களையும் எடுத்து தந்துள்ளார்.

மேலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் வெற்றிக்கு தேவையான 20 ரன்களை நான்காவது வீரராக களம் இறங்கிய அக்சர் படேல் இந்தியா அணிக்கு வெற்றியைப் பெற்று தந்தார்.
இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்த நிலையில் அவரது ரன்கள் வாகைச் சூட வைத்தது.

ஜடேஜாவை விட அப்சர் படேலுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஒப்பிட்டு பார்க்கையில் அவரது இடத்தில் அக்சர் படேல் நிரப்பப்படுவார் என்றும், ஜடேஜாவின் வாய்ப்புகள் குறைக்கப்பட்டு அக்சர் படேல் நிரந்தரமாக இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா அணியில் பல மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.