சிங்கப்பூரில் மக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தல்!!

சிங்கப்பூரில் மக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தல்!!

சிங்கப்பூர்: பறவைக் காய்ச்சல் குறித்து சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பறவைகளை தொடுவதையோ, உணவளிப்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் H5N1 பறவைக் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை எவருக்கும் இந்நோய் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரவியுள்ளது.

விலங்குகள் சுகாதார சேவை மற்றும் சிங்கப்பூர் உணவு ஆணையம் ஆகியவை பறவைக் காய்ச்சலை அப்பகுதியில் ஒரு தொடர் நோயாக அறிவித்துள்ளன.

பறவைகளுக்கு ஏற்படும் நோய் குறித்து கண்காணிக்குமாறு கால்நடை மருத்துவர்கள் மற்றும் பறவை உரிமையாளர்களுக்கு அமைப்புகள் அறிவுறுத்தின.