சிங்கப்பூரில் கடலுக்குள் கனரக வாகனம் விழுந்து விபத்து. இதில் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று பின்இரவில் 2.00 மணியளவில் கெப்பல் முனையத்தில் Prime over எனும் கனரக வாகனம் விழுந்தது.
இந்த விபத்து குறித்து கடல் துறை, துறைமுக ஆணையத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர், சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் ஓட்டுனரின் சடலத்தை தேடினர். ஓட்டுநரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதைத் தெரிவித்தனர். இந்த விபத்தால் கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணைத் தொடர்கிறது என்றும் கூறினர்.