Transparency International Corruption Perception Index எனும் அனைத்து உலக ஊழல் ஒழிப்பு அமைப்பு தரவரிசை வெளியிட்டது. அதில் சிங்கப்பூர் உலக அளவில் ஊழலற்ற நாடுகளில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே ஆசிய நாடு. சிங்கப்பூர் குறைவான தரநிலை இடங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை தர நிலை வரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.
சிங்கப்பூர் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டு வரை தரநிலை வரிசை பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றது. தரவரிசை பட்டியலில் உலகின் 180 நாடுகளும், வட்டாரங்களும் தரவரிசைப் படப்படுகின்றன.
ஊழல் நிலவரம் சிங்கப்பூரில் கட்டுக்குள் இருப்பதாக சிங்கப்பூர் ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை Denmark, Finland, New Zealand ஆகிய நாடுகள் இடத்தைப் பிடித்துள்ளது.