கடலில் எண்ணெய் படலங்கள்!! சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

கடலில் எண்ணெய் படலங்கள்!! சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

PUB எனும் தேசியத் தண்ணீர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தால் கடலில் எண்ணெய் கசிவு கலந்தது. அதனால் செந்தோசா போன்ற ஒரு சில கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள் காணப்படுகிறது. அதனை சுத்தம் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இதனை அடுத்து சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை ஒன்றை PUB வெளியிட்டுள்ளது.

எண்ணெய் படலங்கள் கடற்கரைகள் மற்றும் கடலோர கால்வாய்களில் மட்டுமே பரவி உள்ளதாக அமைப்பு கூறியது.

ஜூரோங் தீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே உள்ள கடல் நீரில் எண்ணெய் படலங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று PUB கூறியது.

பாசிர் பாஞ்சாங்கில் கடலில் கசிந்த எண்ணெய் படலங்கள் சிங்கப்பூரின் நீர் விநியோகத்தை பாதிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சூழலை PUB உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.

எண்ணெய் படலங்கள் சிங்கப்பூரின் கடலோர பகுதிகளை மட்டுமே பாதித்துள்ளது. எண்ணெய் படலங்களால் நீர்த்தேக்கங்கள் பாதிக்கப்படவில்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.