பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும்,சரக்கு ரயிலும் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
நில் ஜல்பாய்குரி பகுதியில் நின்று கொண்டிருந்த Kanchenjunga express பயணிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி விபத்து நிகழ்ந்தது.
பயணிகள் ரயில் சிக்னலுக்காக வழித்தடத்தில் காத்திருந்தது அப்போது சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 60 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள்,பேரிடர் உள்ளிட்ட அவசரகால மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து காரணமாக அந்த ரயில் தடங்களில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா பிரதமர், இந்தியா ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்தை கேட்டவுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.
Follow us on : click here