சிங்கப்பூரில் இம்மாதம் புதிய BTO வீடுகள் விற்பனைக்கு….

சிங்கப்பூரில் இம்மாதம் புதிய BTO வீடுகள் விற்பனைக்கு....

சிங்கப்பூரில் குறைவான காத்திருப்பு காலத்துடன் சுமார் 1300 க்கும் மேற்பட்ட புதிய தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த வீடுகள் இந்த மாதம் விற்பனைக்கு வரும்.

சுமார் 800 வீடுகள் உட்லண்ட்ஸ் பகுதியில் வரவுள்ளன.

குறைவான காத்திருக்கும் காலத் திட்டமான SWT திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அறிமுகமாகும் முதல் தொகுதி வீடுகள் இவை.

இன்னும் மூன்று ஆண்டுகளில் தயாராகி விடும்.

உட்லண்ட்ஸ் பகுதியில் Marsiling Peak One திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

வீடுகள் இன்னும் 2 ஆண்டுகள் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என கழகம் தெரிவித்துள்ளது.

குறுகிய கால காத்திருப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூவாயிரம் வீடுகள் கட்டுவதை கழகத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.

தெம்பனிஸ் பகுதியில் 500 க்கும் அதிகமான வீடுகள் வரவுள்ளன.

அவைகளுக்கு மூன்று வருடம் ஒரு மாதம் காத்திருந்தால் போதும்.

இந்த மாதம் சுமார் 6,800 BTO வீடுகள் விற்பனைக்கு வரவுள்ளன.

உட்லண்ட்ஸ் மற்றும் தெம்பனிஸ் பகுதிகளில் இரண்டு முதல் ஐந்து அறை கொண்ட வீடுகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.