சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நோய் பரவல் காலத்தில் முன்பு இருந்த 72 விழுக்காட்டை எட்டியுள்ளது.
சுமார் நாலரை மில்லியன் பேர் சாங்கி விமான நிலையம் மூலமாக கடந்த மாதம் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு முழுமைக்கும் கணக்கிட்டு பார்த்ததில் மொத்தம் 32 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையைக் கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கிட்டதட்ட பாதி. சாங்கி விமான நிலையம் மூலமாக ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாட்டவர்கள் அதிகமான பயணம் மேற்கொண்டனர்.
இந்த விமான நிலையம் உலக அளவில் பரபரப்பான விமான சேவையாகச் செயல்படும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர்- கோலாலம்பூர் விமான சேவைகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
போக்குவரத்து இணைப்புகளும், சேவைகளும் தொடர்ந்து வளர்ச்சி காணுவதற்காக சாங்கி விமான நிலையத்தில் இரண்டாம், நான்காம் முனையங்கள் மீண்டும் திறக்கப்பட போவதாக கூறப்படுகிறது.