பால்பவுடர் டின்களை திருட்டுவதற்காக குழந்தைகளை ஈடுபடுத்திய தாய்க்கு $3500 அபராதம்!!

பால்பவுடர் டின்களை திருட்டுவதற்காக குழந்தைகளை ஈடுபடுத்திய தாய்க்கு $3500 அபராதம்!!

சிங்கப்பூரில் தனது குழந்தைகளின் மூலம் பால்மாவை திருடிய குற்றத்திற்காக இளம் தாய்க்கு 3,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய லொரேன் சு யி என்ற இளம்பெண் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

குற்றம் நடந்த போது அவரது குழந்தைகளின் வயது 2 வயது, 3 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு (2023) ஜூன் 4 ஆம் தேதி, புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஷெங் சியோங் சூப்பர்மார்க்கெட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

பின்னர் சான் குழந்தைகளின் தள்ளுவண்டியில் 2 டின்கள் Enfamil பால்மாவை பதுக்கி வைத்தார். சான் தான் எடுத்து வைத்த பொருளுக்கு பணம் எதுவும் கொடுக்காமல் கடையிலிருந்து வெளியேறினார்.

அதன் மதிப்பு 270.70 வெள்ளி இருக்கும்.

பின்பு அதே போல் 3 நாட்களுக்குப் பிறகு, சான் தனது கணவருடன் IMM கட்டிடத்தில் உள்ள Giant சூப்பர்மார்க்கெட்டுக்கு சென்றபோது அங்கு 3 பெட்டிகளில் 12 டின் Enfamil பால்மாவை திருடி மறைத்து வைத்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிட்டனர்.

அதன் மதிப்பு $1,565.40 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது.

சானின் கணவர் திருடிய பால்மாவு டின்களை Carousell விற்பனை தளத்தில் $.1,170 வெள்ளிக்கு விற்பனை செய்து லாபம் பார்த்ததும் தெரிய வந்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் பால்மாவு டின்களை எண்ணும் போது திருட்டு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருடப்பட்ட பால்மாவு டின்களுக்கு சான் இழப்பீடு கொடுத்தார்.

திருட்டு மற்றும் மோசடிக்காக சானின் கணவருக்கு கடந்த மாதம் 11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.