மலேசியாவில் காற்பந்து வீரர் மீது ஆசிட் வீச்சு சம்பவம்!! தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேட்டி!!

மலேசியாவில் காற்பந்து வீரர் மீது ஆசிட் வீச்சு சம்பவம்!! தாக்குதலுக்கு பிறகு முதல்முறை செய்தியாளர்களிடம் பேட்டி!!

மலேசியா: கோலாலம்பூரில் மலேசியாவின் தேசிய அணி மற்றும் மாநில கிளப் சிலாங்கூர் எஃப்சியின் வீரரான பைசல் ஹலீம்(26) கடந்த மாதம் ஒரு ஷாப்பிங் மாலில் ஆசிட் வீசப்பட்டது. இது போன்ற தாக்குதல் 4 பேர் மீது கடந்த மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.அவர்களில் பைசல் ஹலீம்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் அவரது முகம், கைகள் மற்றும் உடற் பகுதியில் தீ காயங்கள் ஏற்பட்டது.

அவரின் பேச்சு மற்றும் செயல்களில் பாதிக்கப்பட்டது.

அவரின் பலத்த காயங்களுக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்கள் இந்த காயங்கள் குணமடைய ஆறு மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர் கூறியதாக கூறினார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் விளையாடுவதற்கு செல்வேன் என்று நம்பிக்கையோடு இருப்பதாக அவர் கூறினார்.

தன்னைத் தாக்கியவர்கள் நீதிமன்றத்தில் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

அதே மாதத்தில் மலேசியாவில் கால்பந்து வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

அவரின் குடும்பத்தினரிடம், `நான் ரகசிய இடத்தில் இருப்பதாக’ கூறினார்.

`நான் விரைவில் சுதந்திரமாக இருப்பேன் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார்.