சிங்கப்பூர் அரசாங்கத் தகவல்களை உறுதி செய்ய புதிய நடைமுறை!! விரைவில்.....
ஜூலை 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களால் அனுப்பப்படும் அனைத்து தகவல்களும் ஒரே இணைய முகவரிலிருந்து வரும்.
அரசாங்கத் தகவல்களை பொதுமக்கள் உறுதி செய்வதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது.
அரசாங்க தகவல்கள் போல் வரும் போலியானவைகளை நம்பி மோசடிக்காரர்கள் வலையில் பொதுமக்கள் சிக்குவதைத் தடுப்பதே இந்த புதிய நடவடிக்கையின் நோக்கம்.
அரசாங்கம் சமந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே இணையப் பக்கத்திலிருந்து வரும்.
அரசாங்கத்திடம் இருந்து தான் தகவல் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய `gov.sg’ என்பது சிறிய எழுத்துகளில் இருப்பதை பொதுமக்கள் கவனிக்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு வந்துள்ள தகவல் எந்த அரசாங்க அமைப்பில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிட்டிருக்கும்.
அரசாங்கத்திடம் இருந்து தகவல் வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்த தகவலின் கீழ் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
அரசாங்கம் அனுப்பும் செய்திகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச அமைப்பின் துணைச் செயலாளர் Sim Feng Ji கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு அரசாங்கத்திடம் இருந்து வருவது போலியான தகவல்களால் நடந்துள்ள மோசடி சம்பவங்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
இந்த புதிய நடைமுறை இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக அமல் படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்,மத்திய சேமநிதிக் கழகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.
அந்த அமைப்புகளிடம் இருந்து பொதுமக்கள் தகவல்களைப் பெறுவர்.
Follow us on : click here