G7 மாநாடு!! மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட இந்திய பிரதமர்!!
2024-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி G7 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
G7 உச்சி மாநாட்டில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பை வளர்க்கவும் கலந்து கொள்வதாக பிரதமர் கூறினார்.
இந்த மாநாட்டில் ஜோபிடனும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக NSA தெரிவித்தது.
இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மத்திய தரை கடல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும்.
திரு. நரேந்திர மோடி இந்தியா பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணம்.
G7 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி சென்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும், சக உலகத் தலைவர்களை சந்திக்கவும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது தில் ஏற்படும் பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
இந்தியா இத்தாலியின் கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதற்கும், இந்தோ பசிபிக் மற்றும் மத்திய தரை கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உறுதியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தார். அமெரிக்க அதிபர், பிரிட்டிஷ் பிரதமர், கனேடிய பிரதமர், ஜெர்மன் அதிபர், பிரான்ஸ் அதிபர், ஜப்பான் பிரதமர், ஐரோப்பிய ஆணையம் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஜூன் 13 ஆம் தேதி கூட்டத்தில் உரையாற்றினர்.
இத்தாலியில் இன்று நடைபெறுகிற G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 13) புறப்பட்டார்.
Follow us on : click here