சிங்கப்பூரில் மூத்தவர்களுக்காக உதவும் முயற்சிகள் புதிதாக உருவாக்கப்படுகிறன.“நலமாக வாழலாம், நலமாக மூற்படையலாம்´´ என்ற திட்டத்தில் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் ong ye kung கூறினார்.
இவ்வாண்டு மூத்தோர்கள் ஆரோக்கியமாக இருந்து துடிப்புடன் செயல்பட கூடுதலான சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதே இலக்கு என்றார். இதற்காக புதிய திட்டங்கள் அறிமுகப்பட உள்ளது.
தற்போதைய மூத்தோர்கள், எதிர்கால மூத்தோர்கள் ஆகியோர்களின் தேவைகளைக் கண்டறிய முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.
மூத்தோர்களுக்காக வழிகாட்டும் தற்போதைய நிலையங்கள் நோய்கள், வருமுன் காக்கும் நடவடிக்கைகளையும் முதியோர்கள் துடிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டும். இத்தகைய நிலையங்கள் 119 லிருந்து 220 க்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர்த்தப்படும். தீவெங்கும் உடற்பயிற்சிகள், மன நலனை பாதுகாப்பு திட்டங்கள், மின் கல்வி அறிவுத்திட்டங்கள் முதலியவை விரிவுபடுத்தப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 55000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்தோர்கள் ஈர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.