என்ன…நடிகை அம்மு அபிராமி காதலிக்கும் நபர் இவர் தானா..?

என்ன...நடிகை அம்மு அபிராமி காதலிக்கும் நபர் இவர் தானா..?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பைரவா’ படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

நடிகை அம்மு அபிராமி அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் ‘ராட்சசன்’ படம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.

அதில் அம்மு என்ற சூப்பர் கேரக்டரில் நடித்தார். அதையடுத்து ‘துப்பாக்கி முனை’, ‘அசுரன்’, ‘தம்பி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் மாரியம்மாள் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த நிலையில் தற்போது ‘கனவு மெய்ப்பட’, ‘யார் இவர்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருவதாகவும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாலி சீசன் 3ல் மூன்றாமிடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில் அம்மு அபிராமியை காதலிப்பதாக கூறப்படும் குக் வித் கோமாலி இயக்குநர் பார்த்திபனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘உங்கள் காதலை உறுதிப்படுத்தியதற்கு நன்றி’, ‘உங்கள் இருவரையும் இப்படி பார்த்ததில் மகிழ்ச்சி’, ‘வாழ்த்துக்கள்’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அம்மு அபிராமி மற்றும் பார்த்திபன் இருவரும் இந்த வீடியோ மூலம் தங்கள் காதலை மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.