S-Pass, E-Pass இல் சிங்கப்பூர் செல்ல MOM இல் எப்படி அப்ளை செய்வார்கள்? தெரிந்து கொள்வோம்!!

S-Pass, E-Pass இல் சிங்கப்பூர் செல்ல MOM இல் எப்படி அப்ளை செய்வார்கள்? தெரிந்து கொள்வோம்!!

S-Pass, E-Pass இல் சிங்கப்பூர் செல்வதற்கு தேவையான டாக்குமெண்ட்கள் பற்றி தெளிவாக பார்ப்போமா!!

கம்பெனிகள் S-Pass இல் வேலைக்கு எடுப்பதற்கு முடிவு செய்திருந்தால் அவர்கள் முதலில் பார்ப்பது கோட்டா உள்ளதா என்று பார்ப்பார்கள்.

Quota (கோட்டா) என்பது வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலைகளில் பணிபுரிவதால் சிங்கப்பூரர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு குறைவாகிறது.அதனால் மனிதவள அமைச்சகம் இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது. உதாரணமாக ஐந்து சிங்கப்பூரர்கள் வேலை பார்த்தால் ஒரு வெளிநாட்டு ஊழியரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் பணம் கட்டிய பிறகுதான் Quota இல்லை என்று கூறுவார்கள். பொதுவாக கம்பெனிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

முதலில் Quota உள்ளதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Website,paper போன்றவற்றில் விளம்பரம் கொடுத்திருப்பார்கள். சிங்கப்பூரர்கள் அந்த வேலையில் சேர ஒரு குறிப்பிட்ட நாள் வரை முன்னுரிமை வழங்கப்படும். சிங்கப்பூரர்கள் கிடைக்கவில்லை என்றால் வெளிநாட்டில் இருந்து ஆட்களை தேர்வு செய்யலாம்.

கம்பெனி கேட்கும் Qualification,Experience இருக்க வேண்டும்.உங்களை வேலைக்கு தேர்வு செய்கிறார்கள் என்றால் அந்த வேலையைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் அந்த வேலையின் அனுபவம் இல்லாமல் Resume – இல் அந்த வேலைக்கான அனுபவம் இருப்பது போல் குறிப்பிடுகிறார்கள்.நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடன் அந்த வேலை உங்களுக்கு தெரியாது என்று முதலாளிகளுக்கு தெரிந்தால் உங்களை ஊருக்கு அனுப்பி விடுவார்கள். நீங்கள் செலுத்திய பணம் திரும்ப பெற முடியாது.

சம்பளம் :

மனிதவள அமைச்சகம் ஒரு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.செப்டம்பர் 2023 இல் இருந்து $3000 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வேண்டும் என்றும் 2024 சம்பளத்தை இதிலிருந்து அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சான்றிதழ்கள் சரிபார்க்கும் முறை நீங்கள் கொடுத்த டாக்குமெண்ட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்ப்பார்கள். நீங்கள் சமர்ப்பித்த அனைத்து டாக்குமெண்ட்களையும் சரிபார்த்த பிறகு உங்களுக்கு அப்ளை செய்து மூன்று நாட்களில் MOM website இல் உங்களின் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஏஜென்ட்கள் உங்களிடம் ஏதாவது முன்பணம் கேட்டால் நீங்கள் வெப்சைட்டை பார்த்துவிட்டு அதன் பிறகு பணத்தை கொடுக்கலாம். நீங்கள் அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் சரியாக வைத்து அப்ளை செய்தால் உங்களுக்கு ஒரு வாரத்தில் கூட ip வர வாய்ப்புள்ளது. குறைந்தது 45 நாட்களுக்குள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கிடைத்து விட்டதா?இல்லையா? என்பது தெரிந்து விடும்.