சட்டவிரோத சூதாட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அதிகாரிகள்!!
சிங்கப்பூர்: யூரோ-2024 கால்பந்து போட்டி நெருங்கி வரும் நிலையில், சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உள்துறை அமைச்சகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளது.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவின வரம்புகள், பொறுப்பான சூதாட்டம் போன்ற சமூகப் பாதுகாப்பு அம்சங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கப்பூரில் லாட்டரி மற்றும் விளையாட்டு தொடர்பான சூதாட்ட சேவைகளை வழங்க உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு சங்கமான சிங்கப்பூர் பூல்ஸ் மட்டுமே என்பதை இரு அமைச்சகங்களும் தெரிவித்தது.
உரிமம் இல்லாத சூதாட்டச் செயல்கள் இங்கு அனுமதிக்கப்படாது என்றும் அவர்கள் நினைவூட்டினர்.
ஜெர்மனியில் நாளை முதல் ஜூலை 14ஆம் தேதி வரை யூரோ கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.
Follow us on : click here