இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்... பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்...
இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்…
நியூ யார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா vs அமெரிக்கா இடையிலான முதல் போட்டி.இந்தப் போட்டி இன்று(மே12) நியூயார்க் நகரில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.
நியூயார்க் மைதானமானது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் எந்த பேட்ஸ்மேனும் ரன் சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாது.இந்தச் சூழலில் இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அமெரிக்க அணி பாகிஸ்தானை தோற்கடித்ததன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்திருந்தாலும் பேட்டிங்கில் சில சிக்கல்கள் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சிக்கல்களை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி இரண்டு இன்னிங்ஸிலும் தோல்வியடைந்தார். பவர் பிளேயில் விராட் கோலியால் தனது அதிரடி ஆட்டத்தை காட்ட முடியவில்லை.இதன் காரணமாக அவரை மூன்றாவது வீரராக களமிறக்க ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராட் கோலிக்குப் பதிலாக ஜெய்ஷ்வால் தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பேட்டிங்கிலும், பில்டிங்கிலும் சிவம் துபே தடுமாறி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிவம் துபேவுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சிவம் துபேயை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனைச் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், அணியில் கண்டிப்பாக சிவம் துபே தேவை என்று ரோஹித் சர்மா கருதினால் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை துவக்க ஆட்டக்காரராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஜடேஜாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை மாற்ற வேண்டும் என்று சில கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தடுமாறி வருவதாக சிலர் விமர்ச்சித்து வருகிறார்கள். ரோஹித் அணியில் எப்படி மாற்றம் செய்வார் என்பது தெரியாது இருந்தாலும் சிவம் துபே அணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா எந்த மாதிரியான அணியை தேர்வு செய்யப் போகிறது என்பதை இன்றைய ஆட்டத்தில் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Follow us on : click here