தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர்!!

தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர்!!

சிங்கப்பூர் பிரதமரும், நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணம் இன்று(ஜூன் 10) தொடங்கி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிங்கப்பூரின் பிரதமராக பதவியேற்றப் பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

மேலும் தென்கிழக்கு ஆசிய தலைநகரங்களுக்கும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருனேயில் அவருக்கு மதிய உணவு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பிரதமர் அலுவலகத்தில் பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான அல்-முஹ்ததீ பில்லா மற்றும் அவரது மனைவி ஆகியோரை சந்திப்பார்.

அடுத்ததாக புருனேயிலிருந்து மலேசியாவிற்கு பயணத்தை மேற்கொள்வார். அங்கு மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் மற்ற தலைவர்களுடன் சந்திப்பு நடைபெறும்.