அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கமாக அங்கு செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்கள் முதலிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் பட போவதாக அறிவித்தது.
இதனால் டெக் ஊழியர்களுக்கும் மோசமான காலகட்டமாக அமைந்துள்ளது.இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பணி புரியும் டெக் ஊழியர்கள் மோசமான சூழ்நிலையை எதிர் கொண்டு வருகின்றனர்.ஒரு பக்கம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பணி நீக்கம், மறுபுறம் வேறு வேலையில் சேர முடியாமலும் புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமலும் டெக் ஊழியர்கள் மாட்டிக்கொண்டு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு தொடங்கி 20 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் போவதாக பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
முக்கியமான டாப் 4 பெரிய டெக் நிறுவனங்களான Amazon 18000 ஊழியர்களையும்,Microsoft 10000 ஊழியர்களையும்,Google 12000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யப் போவதாகத் தெரிவித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு Metta நிறுவனம் 11000 பணி நீக்கம் செய்தது. அதேபோல் Amazon 10000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் FAANG நிறுவனங்கள் 10000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
டெக் நிறுவனங்களில் வேலைச் செய்யும் NRI இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.இந்த பணி நீக்கத்தால் இந்தியா ஊழியர்கள் மன அழுத்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனனர்.இந்தியாவில் டெக் துறை சிறப்பாக செயல்படுகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் startup நிறுவனங்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு இருக்கிறது.மக்களுக்கு அதற்கான புதிய தீர்வுகளையும் அளித்து வருகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனிலோ பணி நீக்கம் செய்யப்படாவிட்டாலும், அவர்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அதன்பின் கூடுதல் பணி சுமை,அடுத்த அப்ரைசல் ரேட்டிங் போன்ற காரணங்களால் மன அழுத்த உச்சத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இந்தியாவுக்குச் சென்று நமக்கு ஏற்ற வேலையைத் தேர்வுசெய்து வேலைச் செய்வதே மேல் என்று metta ஊழியர் Blind தளத்தில் தகவலை பதிவிட்டுள்ளார். இன்னும் பிற நிறுவனங்கள் ஊழியர்களும் இதே போல் பதிவிட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியா டெக் ஊழியர்கள் ஹெச்1B மற்றும் எல்1 விசா மூலம் வருவார்கள். இந்த இரு விசாவின் மூலம் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் 60 நாட்களுக்குள் புதிய வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். புதிய வேலை கிடைக்கவில்லை என்றால், கட்டாயமாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும். இது NRI ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கடியான சூழலாகும்.
லின்கிடுஇன் போல தான் இருக்கும் Blind தளம் இருக்கும்.இதில் பதிவிடப்படும் பதிவுகள் யாரால் பதிவிடப்படுகிறது என்று தெரியாது. மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே சேர நினைப்போர் சேர முடியும். இதன் மூலம் போலியான நபர்கள் தளத்தில் சேர முடியாது.