சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண் வேலை!! 10 சதவீத கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா?
சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்கள் அனைவரும் வசதி வாய்ப்புகளுடன் வாழவே ஆசைப்படுகின்றனர். அப்படி வசதியுடன் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் வேலை பார்ப்பதற்காக வேலையாட்களை வைப்பது உண்டு. அதிலும் முதியவர்களை பார்ப்பதற்காக சிலர் நல்ல அனுபவமிக்க பணிப்பெண்களை தேடுகின்றனர். அதற்கு சில வலைதளங்களும் அவர்களுக்கு உதவி புரிகின்றன. அதில் பல அனுபவமிக்க திறமை வாய்ந்த பணிப்பெண்களின் விவரங்கள் அதில் இடம்பெறுகின்றன.
இன்றைய சூழ்நிலையில் பணிப்பெண்களின் தேவையும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றது .உணவு,சம்பளம், இருப்பிடம் என அனைத்து வசதிகளையும் இவ்வேளையில் பெற முடிவதால் சிலர் இவ்வேளையில் விரும்பிச் செய்கின்றனர். மேலும் பணிப்பெண்களும் அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக சில பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள இல்லற பணிப்பெண்கள் தம் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.
சிங்கப்பூரில் அதிகளவான வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக சில பயிற்சி வகுப்புகளில் சேருவது தெரியவந்துள்ளது.
அதிலும் கடந்த சில ஆண்டுகளாவே படித்த அல்லது திறமையான பணிப்பெண்களை வேலையில் அமர்த்தவே முதலாளிகள் விரும்புவதாக சிங்கப்பூர் ஏஜென்ட்கள் கூறுகின்றனர்.
அத்தகைய திறமையான பணிப்பெண்களில் ஒருவர்தான் Joselyn Rosete.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது முதலாளியின் மருந்துச் சீட்டை அவரால் படிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டிய உணவுகளை முன்கூட்டியே திட்ட மிட்டுக் கொடுப்பதாகவும், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் நாட்களைக் குறித்து வைப்பதும் போன்ற பணிகளை வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே மிகத் திறமையாகக் கையாள்கிறார்.
அவரைப் போலவே இன்னும் பல வீட்டுப் பணிப்பெண்களும் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.
அவ்வாறு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்க முதலாளிகள் தயாராக உள்ளனர்.
இத்தகைய பராமரிப்பாளர்களுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow us on : click here