சென்ற ஆண்டு சொத்து சந்தையின் சூட்டைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சொத்து விலை மிதமாக இருந்தது. இதனை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்ட போதிலும், சொத்து சந்தை ஏற்ற இறக்கமாக இருப்பதையும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதேபோல் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் வீடு இருப்பதையும் உறுதி செய்வதற்காக சொத்துச் சந்தை கண்காணிக்கப்படுகிறதாக துணைப் பிரதமர் Heng Swee keat கூறினார்.
சொத்துப் பரிவர்த்தனையும் குறைந்து உள்ளதாக தெரிவித்தார். தற்போது வீட்டு விலை உயர்ந்தும் வட்டி விகிதம் அதிகரித்த சூழல் இருக்கிறது. இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் சொத்து மேம்பாட்டாளர்களிடையே நடந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கலந்து கொண்டு பேசினார். சிங்கப்பூர் அரசாங்கம் சிங்கப்பூரில் உள்ள அனைத்து விநியோகத்தையும் கண்காணித்து வருவதாக கூறினார்.
கட்டுமானத் துறையின் சூழலை உருமாற்ற வேண்டும்.இதை நிலையானதாக வைத்திருப்பதற்கும் முயற்சிகள் செய்ய வேண்டும். இதற்கு சொத்து மேம்பாட்டாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் கூறினார். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டும். வெவ்வேறு தீர்வுகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.