மலேசியாவில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய மாற்றம்!!
மலேசியா முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 10-ஆம் தேதி(இன்று) முதல் டீசலின் விலையில் மாற்றம். அதன் விலை 50 சதவீதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசலுக்கு வழங்கிய மானியங்களை மலேசியா நள்ளிரவுடன் மீட்டெடுத்தது.
விலை மாற்றத்தின் படி ஒரு லிட்டர் டீசலின் விலை 3.35 RM
எரிபொருள், சமையல் எண்ணெய் மற்றும் அரிசி போன்றவற்றிற்கு அதிக மானியங்களை மலேசியா வழங்கி வந்தது.
அண்மை ஆண்டுகளில் விலைவாசிகள் உயர்ந்தது.
அதன் மானியக் கட்டணங்களும் சாதனை அளவை எட்டும் அளவிற்கு கூடியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு டீசலின் RM 1.4 பில்லியனில் இருந்து 2023 இல் RM 14.3 பில்லியனாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மானியங்களை குறைப்பதனால் வருடம் தோறும் சுமார் RM 4 பில்லியன் சேமிக்க வாய்ப்புள்ளதாக கடந்த மாதம் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,சந்தை விலைக்கேற்ப டீசலின் விலை நிர்ணயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த டீசல் விலை மீனவர்கள் மற்றும் தரைவழி போக்குவரத்து வாகனங்களுக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாகனங்கள் வைத்திருக்கும் தகுதியுடையோர்களுக்கு அவர்களின் வருமானத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அரசாங்கம் நிதி உதவி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை ஒவ்வொரு வாரமும் தற்போதைய புதிய விதிமுறைப்படி அறிவிக்கப்படும்.விலை மற்றும் தற்போது நிலவி வரும் சூழலையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என அமீர் ஹம்சா கூறினார்.
Follow us on : click here