சிங்கப்பூரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார். இன்னும் பெரிய அளவில் இயல்புநிலை திரும்புவதை எதிர்பார்க்கலாம்.
தற்போது சீன புத்தாண்டு விடுமுறை முடிந்துள்ளது. விடுமுறைக்குப் பிறகு கிருமிப்பரவல் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று கூடலுக்கான வரம்பும் அடங்கும். விடுமுறை காலத்திற்கு பிறகு நோய் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.ஆனால், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நடைமுறை மட்டும் தொடர்கிறது. பொதுப் போக்குவரத்து இடங்களிலும், சுகாதார பராமரிப்பு இடங்களிலும் முக கவசம் அணிய வேண்டும்.500 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிங்கப்பூரில் கிருமி பரவல் நிலையாக உள்ளது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் அவசர பிரிவுகளிலும் பெருமளவு நெருக்கடி இல்லை என்றும் கூறினார்.
சீனாவில் புதிதாக பரவிய கிருமி பரவல் சிங்கப்பூரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சென்ற மாதம் சீனாவில் இருந்து திரும்பிய ஒரே ஒரு சிங்கப்பூரர்க்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது எல்லை கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் சீனாவில் இருந்து பயணிகள் வர ஆரம்பித்துவிட்டனர். சென்ற வாரம் வந்த பயணிகளிடம் இருந்து கிருமி தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் கூறினார்.