சிங்கப்பூரில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள காக்கி புக்கிட் சமூக மன்றம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள காக்கி புக்கிட் சமூக மன்றம் இப்போது குடியிருப்பாளர்களுக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு சேவை செய்வதே அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
இப்பகுதியில் வசிப்பவர்களில் பாதி பேர் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை சேர்ந்த முதியவர்கள்.
அவர்களுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வகுப்புகள் முதல் சுகாதார பரிசோதனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வரை, புதுப்பிக்கப்பட்ட சமூக மன்றத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.
வயதான குடியிருப்பாளர்கள் அனைத்து வசதிகளையும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும்,சேவைகளை பெறக்கூடிய வகையிலும் உள்ளது.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியிருப்பாளர்கள் தனது பங்களிப்பை கொடுக்கும் வகையில் சீரமைக்கப்பட்ட சமூக மன்றத்தில் அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.
அப்பகுதிகளில் நாம் மகிழ்ச்சியுடன் குடும்பத்தினருடன் லேசான உடற்பயிற்சியிலும் ஈடுபடலாம்.
நேற்றைய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், இந்த மன்றம் முதியோர் மற்றும் இளைஞர்களுக்கான முக்கியமான மன்றமாக இருக்கும் என்றார்.
அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கும், ஒருவருக்கொருவர் பழகுவதற்கும் இது சிறந்த இடமாக இருக்கும் எனக் கூறினார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் அலுவலகம் முதியோர்களுக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று திரு.ஹெங் கூறினார்.
Follow us on : click here