சாமத்யமாக பணத்தை கடத்திய கில்லாடி!!சம்பவ இடத்திற்கு வந்து கெத்து காட்டிய அதிகாரிகள்!!

சாமத்யமாக பணத்தை கடத்திய கில்லாடி!!சம்பவ இடத்திற்கு வந்து கெத்து காட்டிய அதிகாரிகள்!!

விமான பயணத்தின் போது பயணிகள் எந்தெந்த பொருட்களை கொண்டு வரலாம் கொண்டு வரக்கூடாது என்று தெரிந்திருந்தாலும் சிலர் ரகசியமாக சில பொருட்களை கொண்டு வருவதுண்டு. அப்படி கொண்டு வருவதால் அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுபோல ஒரு சம்பவம் தான் சிங்கப்பூர் விமான நிலையத்தில் நடந்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 1 வழக்கமான சோதனையின் போது சந்தேகப்படும்படி ஒருவர் நடந்து கொண்டதாகவும் அவரது பேண்ட் பாக்கெட்டில் 75,000 வெள்ளி பணத்தை வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்ற விவரங்கள் குறித்த தகவல் வெளியிடவில்லை.

மே-7 ஆம் தேதி இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமான பயணத்தின் போது பயணிகள் தங்களிடம் 20,000 வெள்ளிக்கு மேல் பணத்தை வைத்திருந்தால் அதற்கான முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவிக்கிறது.

பணமோசடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுப்பதற்கும் இத்தகைய நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

சிங்கப்பூருக்கு வருகை புரியும் அல்லது புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.