சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள விநோதமான அரிய மீன்!!

சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள விநோதமான அரிய மீன்!!

சிங்கப்பூரில் ஓர் அரிய மீன் கண்டறியப்பட்டுள்ளது.அதனை சிங்கப்பூர் ஆய்வுக் குழு எனும் The Untamed Paths கண்டறிந்துள்ளது.

அது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் ” சிங்கப்பூரில் இது ஓர் அரிய காட்சி” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அரிய வகை மீனின் படங்கள் ஆன்லைனில் பலரால் பகிரப்பட்டு மேலும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

அந்த அரிய வகை மீனின் பெயர் Longnoster Stargazer . இது சிங்கப்பூர் மணலிலிருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மீனின் தன்மையானது தனது இரைக்காக தனது தலை மட்டும் தெரியும் அளவிற்கு புதைந்து காத்திருக்கும்.

மேலும் அது பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும்.

அதன் தோற்றமானது முட்டைக் கண் மற்றும் தலைக்கீழான உதடு என விசித்திரமானதாக இருக்கும்.