தமிழ்நாட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பல போலி ஏஜென்ட்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பல பேர் சிங்கப்பூருக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவு பலரிடம் இருக்கிறது. இதுபோன்று பல கனவுகளுடன் இருப்பவர்களைப் போலி ஏஜென்ட்கள் குறி வைக்கிறார்கள். இதுபோன்று நினைப்பவர்கள் முகம் தெரியாதவர்களிடம் பணத்தைக் கட்டி ஏமாந்து விடுவார்கள்.
தற்போது போலி ஏஜென்ட்களில் வடமாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. வடமாநிலத்தவர்கள் அவர்களின் நிறுவனத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இதற்கு முன் நீங்கள் ஆன்லைனில் ஏதேனும் வேலைக்காக விண்ணப்பித்திருந்தால் அதனைக் கொண்டு தொடர்புக் கொள்வார்கள். தொடர்பு கொண்ட பிறகு வேலை இருக்கிறதாக கூறுவார்கள்.
அவர்கள் நம்ப வைப்பதற்காக போலியான OFFER LETTER அனுப்புவார்கள். அதன்பின் MOM பணம் கட்ட வேண்டும் என்று கூறுவார்கள். இதற்கு 6000 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகும் என்று கூறுவார்கள். அதன்பின் தமிழ்நாட்டில் உள்ள Medical Center களில் மெடிக்கல் checkup செய்ய சொல்வார்கள். அவர்களுக்கும் இதன் மூலம் கமிஷன் கிடைக்கும்.அவர்கள் கேட்கும் பணத்தை நாம் செலுத்திய பிறகு, தங்களின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்து டெல்லி செல்வதற்கு முயலாத காரணத்தால் பணம் பறிபோகி விடுகிறது.
சில நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார்கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற போலியான நிறுவனங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்பதை பற்றி காண்போம். அவர்கள் கொடுக்கின்ற OFFER LETTERS இல் சிங்கப்பூர் கம்பெனியைப் பற்றிய எந்த ஒரு விவரமும் இருக்காது. அதில் தகவல் கொள்ள எண்கள் இருக்கும். அதில் Landline Number இருக்காது. அதில் இடம்பெற்றிருக்கும் இணையதளம்(Website).sg.com என்று முடிவு முடிவடைந்திருக்கும். இதுபோன்று, sg. Com என்று இருந்தால் இது போலியானது. இது எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.Website .sg வந்தால் மட்டுமே சிங்கப்பூரில் Register செய்யப்பட்டதாகும். இதுபோன்ற போலியான தகவல் மூலம் ஏமாந்து விடாதீர்கள்.
இதுபோன்ற போலியானோர் தொடர்பு கொண்டால் அதனை தவிர்த்து விடுங்கள். தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது தங்கள் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் மூலமாகவோ வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வது நல்லது. குறைந்த அளவு முன்பணம் கட்டி வெளிநாட்டிற்கு வருவது நல்லது.
வட மாநிலத்தவர்கள் தங்களைத் தொடர்பு கொண்டு வேலை இருப்பதாக கூறி அணுகினால், அவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.“ போலியான ஏஜென்ட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருங்கள்! விழித்திருங்கள்!´´