சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்!!13 பேர் கைது!!

சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்!!13 பேர் கைது!!

சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்….13 பேர் கைது….
சிங்கப்பூரில் திருமணம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் வியட்நாமைச் சேர்ந்த பெண்கள் மற்றும் 7 பேர் சிங்கப்பூர் ஆண்கள் என தெரிய வந்துள்ளது.

சந்தேகப்படும் நபர்களின் வயதானது 22 இலிருந்து 32 க்குள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

குடிவரவு சோதனைச் சாவடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்கிடமான திருமணக் குற்றங்கள் நடந்தது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொது குடியிருப்பு வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருமண குற்றங்கள் மட்டுமின்றி, சுற்றுலா வருகை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கியதற்காக சந்தேகிக்கப்படும் நபர்களின் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.

திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குடியேறுவதற்கு சந்தேகத்திற்கிடமான முறையில் திருமணக் குற்றங்களில் ஈடுபடுவோர் அல்லது உதவி செய்தால் கூட அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்குவதற்கும் கூட சட்டத்தில் இடம் இருக்கிறது.